விழுப்புரம் முதல் கடலூர் வரை ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மட்டும் விண்ணப்பித்துள்ளது.
மத்திய எரிசக்தி இயக்குநரகம் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 8 இடங்களை தேர்வு செய்து சர்வதேச அளவிலான ஏலத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், 7 ஆவது சுற்றில் விழுப்புரம் முதல் கடலூர் வரையிலான ஆழ்கடல் பகுதிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இதற்கு மற்ற நிறுவனங்கள் ஏதும் விருப்பம் தெரிவிக்காத நிலையில், ஓஎன்ஜிசி மட்டும் விண்ணப்பித்துள்ளது.
இதனால் நேரடியாக ஓஎன்ஜிசி நிறுவனமே ஒப்பந்தம் செய்யும் சூழல் எழுந்துள்ளது. தமிழகத்தில் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மற்ற மாவட்டங்களை எண்ணெய் நிறுவனங்கள் குறி வைப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.