தமிழ்நாடு

அதிமுக ஒற்றைத் தலைமைக்கு தடையாக இருந்த அந்த ஒரு தீர்மானம் இதுதான்!

அதிமுக ஒற்றைத் தலைமைக்கு தடையாக இருந்த அந்த ஒரு தீர்மானம் இதுதான்!

நிவேதா ஜெகராஜா

பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது. அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க காரணமாக இருந்தது முதல் தீர்மானம்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அப்படி முதல் தீர்மானத்தில் என்னதான் இருந்தது என்பது குறித்து புதிய தலைமுறை கள ஆய்வு செய்தது.

பொதுக்குழுவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த 23 தீர்மானங்களில் முதல் தீர்மானம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பற்றியதாக இருந்தது. கட்சியின் அமைப்புத் தேர்தலின் முதற்கட்டமாக கடந்தாண்டு இறுதியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் கட்சியின் சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல என குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் சட்டதிட்டவிதிகளின் படி அடிப்படை உறுப்பினர்களால் இணைந்தே தேர்வு செய்யப்பட்டனர் என்பதாக அந்த தீர்மானம் இருந்தது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஒற்றைத்லைமை என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடும் என்பதால் ஒட்டுமொத்தமாக அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்தாகக் கருதப்படுகிறது.