”கலைஞர்போல ஒருவர் பிறக்க முடியாது” என மு.க.அழகிரி கூறினார்.
மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய மு.க.அழகிரி இது குறித்து கூறும்போது, “ எத்தனையோ நபர்களை நான் அமைச்சர் ஆக்கினேன். ஆனால் ஒருவருக்கு கூட நன்றி இல்லை. கலைஞரை ஸ்டாலினுடன் ஒப்பிடுகின்றனர். அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைஞருக்கு இருக்கின்ற அறிவு இந்த உலகில் யாருக்கும் கிடையாது.
அவரின் பேச்சு, கலை, எழுத்து, இலக்கியம் யாருக்கு இருக்கு? அவரை போல உருவாக ஒருவர் பிறக்க வேண்டும்.ஆனால் அப்படியொருவர் பிறக்க முடியாது. ஆனால் அவர்கள் இன்று கலைஞரை மறந்து விடடு கட்சி நடத்துகின்றனர். ஆகையால் கலைஞரை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். கலைஞர்தான் நமது உயிர் மூச்சு” என்றார்.