சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா பொது முடக்க தளர்வின் ஒரு பகுதியாக கடந்த மாதம் அனைத்து விதமான பேருந்து சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் சாலை வரி செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்த நிலையில், ஆம்னி பேருந்து சேவை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆம்னி பேருந்துகள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 500 பேருந்துகள் இயக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்து சேவை தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகே பேருந்துகளில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.