தமிழ்நாடு

பாசனக் கால்வாயில் கலந்த எண்ணெய் கழிவுகள்: விவசாயிகள் குற்றச்சாட்டு

பாசனக் கால்வாயில் கலந்த எண்ணெய் கழிவுகள்: விவசாயிகள் குற்றச்சாட்டு

webteam

திருவாரூர் அருகே பாசனக் கால்வாயில் எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கருப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் அருகே உள்ள பாசன வாய்க்காலில் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் ‌குற்றம்சாட்டுகின்றனர். அந்த பாசனக் கால்வாயை நம்பி 300 ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கால்வாய் முழுவதும் எண்ணெய் கழிவுகள் நிரம்பியிருப்பதால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள குளம் உள்ளிட்‌ட நீர்நிலைகளிலும் எண்ணெய்‌ கழிவுகள் கலந்திருப்பதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வருந்துகின்றனர்.

இதுதொடர்பா‌க மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜிடம் கேட்டபோது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.