தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில்களில் டோக்கனுக்குப் பதிலாக QR கோடு பொறித்த காகித டிக்கெட்?

சென்னை மெட்ரோ ரயில்களில் டோக்கனுக்குப் பதிலாக QR கோடு பொறித்த காகித டிக்கெட்?

JustinDurai
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், டோக்கனுக்குப் பதில் காகித டிக்கெட் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, டோக்கன் முறைக்குப் பதிலாக கியூ ஆர் கோடு பொறித்த காகித டிக்கெட் நடைமுறையை அமல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலைங்களுக்குள் நுழையவும் வெளியேறவும் இந்த டிக்கெட்டை பயன்படுத்தலாம். இதன் மூலம் டோக்கன்களைப் போல, ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் நிறுவும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.