தமிழ்நாடு

துக்கம் விசாரிக்க ஒரே லாரியில் 90 பேர் பயணம் - மடக்கி பிடித்து அபராதம் வசூல்

துக்கம் விசாரிக்க ஒரே லாரியில் 90 பேர் பயணம் - மடக்கி பிடித்து அபராதம் வசூல்

webteam

தனிமனித இடைவெளி, முகக்கசவம் இல்லாமல் ஒரே லாரியில் துக்கம் விசாரிப்பதற்கு சென்ற 90 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்கு அரசு தனிமனித இடைவெளி, முகக்கசவம் அணிதல் மற்றும் அடிக்கடி கை கழுவுதலை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் பேருந்துகளில் தனிமனித இடைவெளியுடன் பயணிக்க வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததையடுத்து துக்கம் விசாரிப்பதற்கு ஒரே லாரியில் 90 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த லாரியில் நிற்பதற்கு கூட இடைவெளியி இல்லை. முகக்கசவம் அணியாமலும் பலர் சென்றுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில், புதியபாலம் சந்திப்பில் ஈடுபட்டிருந்த நகராட்சி பணியாளர்கள், லாரியில் வந்த பொதுமக்களை நிறுத்தி விசாரித்தனர். அதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 90 பேர் பயணம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து தமிழக அரசின் கொரானா தடுப்பு கட்டுப்பாடு விதிகளை மீறி செயல்பட்டதாக அவர்கள் லாரியில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னர், அனைவரும் மற்றொரு வாகனத்தில் புறப்பட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.