சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேற்று நேரில் சென்று, அவரை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இரவு 8 மணி அளவில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நீண்ட இந்த சந்திப்பில் இருவரும் தற்கால அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல் வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தபோது, சீமான் அவருக்கு நேரெதிரான நிலை எடுத்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். அதன்பின்னர் இப்போதுதான் அவர்கள் சந்தித்து கொள்கின்றனர். அதனால் இந்த சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று புதிய தலைமுறைக்கு பிரேத்யேக பேட்டி ஒன்றினை வழங்கியுள்ளார் சீமான். அப்போது பேசிய அவர்,
"விமர்சனத்தை தாங்க முடியாதவன் விரும்பியது எதையும் அடைய முடியாது. அவதூறுகளை கடக்க இயலாதவன் அற்பவெற்றியை கூட தொட முடியாது. சங்கி என்பதன் பொருள் சக தோழன், நண்பன் என்பதாகும். இவர்கள் சங்பரிவார்கள் என்பதிலிருந்து சங்கி சங்கி என்று கூறுகிறார்கள். உண்மையான சங்கிகள் என்பவர்கள் எங்களை சங்கி என்று கூறுபவர்கள்தான். திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால், அப்போது பெருமையாக சங்கி என்பதை நாங்கள் ஏற்கதான் வேண்டும்
பிரதமரை காலையில் மகனும், மாலையில் தந்தையும் (முத்லவர் துணை முதல்வரை குறிப்பிட்டு) சந்தித்து வருகிறார்கள். ஆனால், சந்தித்தது எதற்கான என்பதும் தெரிவிக்கப்படுவதில்லை. சம்பந்திகள் போல, பிரதமரும், முதல்வரும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறீர்கள். இது என்ன கொடுமை?
நான் ரஜினியை சந்தித்து பேசியதை குறித்து தெரிவிக்கிறேன். ஆனால், நீங்கள் தெரிவிப்பது காரணம் இல்லை. எங்களுக்குள் கள்ள உறவு இல்லை; நல்ல உறவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.