தமிழ்நாடு

நெருங்கும் புயல் சின்னம்... சூறாவளிக்காற்று எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வீசும் தெரியுமா?

நெருங்கும் புயல் சின்னம்... சூறாவளிக்காற்று எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வீசும் தெரியுமா?

webteam

தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தெற்கு மற்றும் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சென்னையில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், நாளை மறுநாள் பிற்பகலில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று, தென்மேற்கு மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதியில், சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.