2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறக்குறளை மேற்கொள் காட்டி பேசினார்.
2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார்.அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
அதில், “ இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
குறளுக்கான பொருள்: பொருள் வரும் வழிகளை மென்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும், வல்லவன் அரசன்.
அதேபோல,
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து என்ற குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.
குறளுக்கான பொருள்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.