தமிழ்நாடு

நீலகிரி: 3 பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணி தீவிரம்

நீலகிரி: 3 பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணி தீவிரம்

Veeramani

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

தேவன் எஸ்டேட் பகுதியில் பதுங்கி உள்ள அந்த புலியின் நடமாட்டத்தை நேரில் பார்த்ததாக மக்கள் கூறியதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மரங்களின் மீது பரண்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே இருவர் கொல்லப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மாடு மேய்த்து கொண்டிருந்த சந்திரன் என்பவர் புலியின் தாக்குதலுக்கு இரையானர். மக்களின் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.