தமிழ்நாடு

'டார்ச் லைட் சின்னம் வேண்டாம்!'- எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி முடிவால் 'மநீம'வுக்கு கிடைக்குமா?

'டார்ச் லைட் சின்னம் வேண்டாம்!'- எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி முடிவால் 'மநீம'வுக்கு கிடைக்குமா?

webteam

டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி அறிவிப்பு.

புதுச்சேரிக்கு 2021 தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதனால், கமல்ஹாசன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம், எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழகத்திலும் பேட்டரி - டார்ச் சின்னம் கிடைப்பதற்காக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் மேல்முறையீடு செய்வது என முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. தமிழகத்தில் பேட்டரி - டார்ச் சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்தது மநீம. மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் டார்ச் லைட் சின்னம் விவகாரத்தில் புதிய திருப்பமாக, டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

டார்ச் லைச் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் வழங்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்தில் ம்.ஜி.ஆர். மக்கள் கட்சி விண்ணப்பித்துள்ளது. இது குறித்து தெரிவித்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி, எம்ஜிஆரை நினைவுப்படுத்தும் ஒரு பொருளை சின்னமாக தராமல், டார்ச் லைட்டை சின்னமாக தந்தது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளார்