தமிழ்நாடு

கேஆர்பி அணைக்கு புதிய மதகு தயார்

கேஆர்பி அணைக்கு புதிய மதகு தயார்

webteam

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் புதிய மதகு அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

கே.ஆர்.பி. அணையின் பிரதான மதகில் கடந்த மாதம் 29ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. அணையில் அதிகளவில் தண்ணீர் இருந்ததால் உடைந்த மதகை சீரமைப்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து 32 அடிக்கு நீர்மட்டத்தை குறைத்து கடந்த 15 நாட்களாக உடைந்த மதகு வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி எடுக்கபட்டது. பின்னர் 40 அடி அகலம் 12 அடி உயரத்திற்கு புதிய மதகு தயாரிக்கபட்டது. இரவு பகலாக 20க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் புதிதாக தயாரிக்கபட்ட மதகை அணையில் பொறுத்தும் பணி தொடங்கி உள்ளது. மதகை முழுமையாக பொருத்த 5 நாட்கள் ஆகும் எனவும், அதற்கு பின்னர் கூடுதல் தண்ணீர் அணையில் தேக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.