தமிழ்நாடு

சிறைகளில் செல்போன் புழக்கத்தைத் தடுக்க புதிய திட்டம்

சிறைகளில் செல்போன் புழக்கத்தைத் தடுக்க புதிய திட்டம்

webteam

சிறைகளில் செல்போன் புழக்கத்தைத் தடுக்க செல்ஜாமர் கருவி பொருத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் மத்திய சிறைச்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து 43 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
2015 -ம் ஆண்டில் 763 செல்போன்களும், 461 சிம்கார்டுகளும், 2016-ம் ஆண்டு 280 செல்போன்களும், 200 சிம்கார்டுகளும் சிறைகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சிறைகளில் கைதிகளிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்தாலும் கூட அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையில், தமிழக சிறைகளில் முதல் முறையாக செல்ஜாமர் கருவி பொருத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் மொத்தமாக 12 செல்ஜாமர் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. புழல் சிறையில் 3 செல்ஜாமர் கருவிகளும், கோவை மத்திய சிறையில் 2 செல்ஜாமர் கருவிகளும், எஞ்சிய 7 செல்ஜாமர் கருவிகள் பிற மத்திய சிறைசாலைகளிலும் பொருத்தப்படும் என்றும், இவை வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.