தமிழ்நாடு

இணையம் மூலம் குடிநீர் பெற புதிய வசதி

இணையம் மூலம் குடிநீர் பெற புதிய வசதி

webteam

லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்பும் பொதுமக்களுக்கு புதிய வசதியை சென்னை குடிநீர் வாரியம் வழங்கியுள்ளது.

லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்பும் பொதுமக்கள் தற்போது தங்கள் குடியிருப்பு பகுதிக்குட்பட்ட நீர்பரப்பு மையங்களில் மட்டுமே பதிவு செய்து குடிநீரை பெற்று வருகின்றனர். இந்த முறையை எளிமைப்படுத்தும் வகையில், இணையதளம் மூலமாகவும், ஒருமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி வழியாகவும் முன்பதிவு செய்யலாம் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் www.chennaimetrowater.com என்ற இணைய தளத்தில் தங்களுக்குத் தேவையான அளவு குடிநீரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல், ஒருமுகப்படுத்தப்பட்ட முன்பதிவிற்கு பொதுமக்கள் 044-45674567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீரை பெறலாம். இந்த இரண்டு சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதில் தற்போதுள்ள நடைமுறையும் தொடரும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.