தமிழ்நாடு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 13ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 13ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Veeramani

வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11ஆம் தேதி உருவாகவுள்ளதால், வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வருகிற 13ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 16 சென்டி மீட்டர் மழையும்,

பந்தலூர் பகுதியில் எட்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வருகிற 11ஆம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.