தமிழ்நாடு

மாருதா காரணமாக மழை பெய்யுமாம் இன்று

மாருதா காரணமாக மழை பெய்யுமாம் இன்று

Rasus

வங்ககடலில் உருவாகியுள்ள மாருதா புயல் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. அந்தமானுக்கு மேற்கே நகர்ந்துவரும் அந்த புயலுக்கு “மாருதா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்துகொண்டிருக்கும் மாருதா புயல், மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மியான்மர் நாட்டில் புயல் கரையைக் கடக்கும் என்றும் அப்போது 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதா புயல் காரணமாக அந்தமான் நிகோபர் தீவுகளிலும் தமிழகத்தில் சில இடங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அந்தமான் கடல்பகுதியில் யாரும் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இதனிடையே தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.