தமிழ்நாடு

காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை

காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை

rajakannan

நெல்லையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ்துரை மரணத்திற்கு காரணமானவர்களை பிடிக்க 7 ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், ஜெகதீஷ்துரை கொலையில் சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படையும், 2 உட்கோட்ட காவல் ஆய்வாளர்களையும் விசாரணைக்கு நியமித்துள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

முன்னதாக, தன்னுடைய கணவரை எஸ்.ஐ தான் திட்டமிட்டு ஆள் வைத்து கொன்றதாக, காவலர் ஜெகதீஷனின் மனைவி சந்தேகம் எழுப்பினார். 5 காவலர்கள் இருக்கையில் தன்னுடைய கணவரை மட்டும் தனியாக மணல் கொள்ளையர்களை பிடிக்க அனுப்பியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காவலர் ஜெகதீசனின் உறவினர்களும் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினர்.