தமிழ்நாடு

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு - 300 நாட்டுக் கோழிகள் உயிரிழப்பு

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு - 300 நாட்டுக் கோழிகள் உயிரிழப்பு

kaleelrahman

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாளையங்கோட்டை கக்கன் நகரில் இரண்டு வீடுகள் இடிந்து சேதம். நெல்லை கருப்பந்துறை பகுதியில் உள்ள கோழிபண்ணைக்குள் வெள்ள நீர் புகுந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் உயிரிழந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் நிரம்பி உபரிநீர் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப் பட்டுள்ளது, இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கருப்பந்துறை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கோழிபண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்தது, இதனால் 300க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் மற்றும் கோழி குஞ்சுகள் உயிரிழந்தன. எஞ்சிய கோழிகளை பாதுகாப்பாக அப்புறபடுத்தினர்.

அதேபோல் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த இராஜா குடியிருப்பு பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தது,. வீடுகள் இடிந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்.