தமிழ்நாடு

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநிலங்களில் எழுத உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநிலங்களில் எழுத உச்சநீதிமன்றம் உத்தரவு

Rasus

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் கூட மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்படும். கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்களை ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்க வந்தபோது, நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்தை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனிடையே அடுத்தாண்டு முதல் தமிழக மாணர்கள் சிரமமின்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.