ஊடுருவல்காரர்களால் முடக்கப்பட்டிருந்த முரசொலி நாளேட்டின் இணைய தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
காலை 10.10 மணியளவில் இணையதளம் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. முன்னதாக, இன்று காலை இணைய தளம் லிஜியன் குழும ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தடை செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும், இந்தியில் விரிவான தகவல்களும் வெளியிடப்பட்டிருந்தன. உத்தரப் பிரதேசத்தில் வாக்குச்சீட்டு மூலம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முரசொலி இணைய தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை இதே லிஜியன் குழும ஹேக்கர்கள் முடக்கிய சம்பவங்கள் நடந்தன.