தமிழ்நாடு

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" கோவையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி பேச்சு

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" கோவையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி பேச்சு

webteam

கோவையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

கோவையில், தமிழகத்திற்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மோடி “தொழில் நகரமான கோவைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பவானி சாகர் அணையை விரிவுபடுத்தும் திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவர். வள்ளுவரின் குரல் நினைவுக்கு வருகிறது.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’. இதன் பொருள், உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே சிறப்பாக வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. இந்திய தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ” என்றார்.