தமிழ்நாடு

20 தொகுதிகளில் திமுக போட்டி: மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்.

20 தொகுதிகளில் திமுக போட்டி: மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்.

webteam

மக்களவைத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சீட் கேட்டு வந்த நிலையில், தொண்டர்களுக்கு எழுதிய மடலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதைத் தெரிவித்துள்ளார்.அவர் எழுதியுள்ள மடலில், ’தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் எப்படி கழகத்தின் சார்பில் குழுக்கள் அமைத்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்திடுவாரோ அதே நடைமுறைப்படி தொகுதிப் பங்கீடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

 தொகுதி உடன்பாடு தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் திரைமறைவில் நடக்கவில்லை. பொதுக்கூட்ட மேடை ஏறுவதற்கு முன்பாக, ஒப்பந்தம் போட்டு எப்படியாவது இழுத்து வந்து மேடையேற்ற வேண்டும் என்று திட்டமிடப்படவில்லை. கட் - அவுட்டை வைப்பதும் எடுப்பதுமாக கேலிக்கூத்துகள் இல்லை. ஏனெனில், ஊழல் ஆதராங்களைத் திரட்டி வைத்து - ரெய்டு பயம் காட்டி - மிரட்டி அமைக்கப்பட்ட செயற்கைக் கூட்டணி அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

’’ 20 தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுவதென ஒப்பந்தங்கள் நிறைவேறி யுள்ளன. மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும்’’ என்றும் அவர் அந்த மடலில் கூறியுள்ளார்.