பரிசோதனையில் எந்த குறைவும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதற்காக பரிசோதனையை அரசு குறைத்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பரிசோதனையில் குறைவு ஏதும் இல்லை என தெரிவித்தார். மேலும்,
''மக்கள் பதட்டப்பட வேண்டாம், பயப்படவேண்டாம், பீதி அடைய வேண்டாம். பரிசோதனையில் எந்த குறையும் இல்லை. யார் ஒருவரும் விடுபடாமல் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக பரிசோதனை செய்யும் மாநில தமிழகம் தான்.
பரிசோதனைக் குறைப்பு என்ற கருத்து ஏற்புடையதல்ல. கடந்த 108 நாள்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் என அரசு இயந்திரம் முழுவதுமாக பணியாற்றி வருகிறது, ஆக்க பூர்வமான கருத்துக்கள் சொல்லலாம் ஆனால் குறை சொல்வது வருத்தமாக இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்