இபாஸ் பதிவு செய்தவுடனே வழங்க வேண்டும் என சட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.
வேலூர் சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ.175.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 13 அங்கன்வாடி மையங்களின் சாவிகளை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா ஊரடங்கு காலத்தில் 30% முதல் 40% வரை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் வருவாய் குறைந்துள்ளது.
பணம் பெற்றுக்கொண்டு இபாஸ் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளோம். இபாஸ் பதிவு செய்த உடனே வழங்க வேண்டும் என சட்டம் எதுவும் இல்லை. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்குவர். இபாஸ் உடனே கிடைக்காததற்கு காரணம் பொது மக்களின் பாதுகாப்பிற்காகதானே?”எனத் தெரிவித்தார்.