நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் Twitter
தமிழ்நாடு

“கொட்டும் மழையிலும் மக்களோடு மக்களாக..” - அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்த 'நடப்போம் நலம் பெறுவோம்'

தமிழக சுகாதாரத் துறை சார்பில் 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

webteam

தமிழக சுகாதாரத் துறை சார்பில் 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை அடையாறு முத்துலட்சுமி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, கொட்டும் மழையில் நனைந்தவாறு நடைபயணம் மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதுதொடர்பாக ட்விட்டரில் அமைச்சர் உதயநிதி போட்டுள்ள பதிவில், “உடற்பயிற்சியில் முக்கியமானதும், எல்லோராலும் மேற்கொள்ள கூடியதுமானது நடைபயிற்சி.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், அத்தகைய நடைபயிற்சியை பொதுமக்கள் எந்த தடையும் இன்றி, பசுமையும் - சுகாதாரமும் நிறைந்த சூழலில் மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 8KM நடைபயிற்சி Health Walk என்னும் திட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை தொடங்கி வைத்தோம்.

கொட்டும் மழையிலும் மக்களோடு மக்களாக நடைபயிற்சியில் ஈடுபட்டோம். இந்தத் திட்டத்தை பயன்படுத்தி மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வாழ்த்துகள்” என்றுள்ளார்.

இவ்விழாவின்போது அமைச்சர் உதயநிதியுடன் மேயர் பிரியா, எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.