Minister Anbarasan  pt desk
தமிழ்நாடு

“ஆளுநர் மூலம் தனியாக ஆட்சி செய்ய நினைக்கும் பாஜக-வின் முயற்சி நிறைவேறாது” - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

“தமிழகத்தில் ஆளுநர் மூலம் பாஜக தனியாக ஆட்சி செய்ய நினைக்கிறது. அந்த கனவு, திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் பிறந்த மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது” என குன்றத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் குன்றத்தூர் திமுக நகர்மன்றத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் ‘திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்’ நேற்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்கு தேவையானவற்றை செய்வார்கள் என்ற ஒரே நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்துள்ளார்கள். தேர்தல் அறிக்கையில் கூறிய 89 சதவீதம் வாக்குறுதிகளை இரண்டே ஆண்டுகளில் நிறைவேற்றி நாட்டு மக்களின் மத்தியில் நம்பிக்கையை பெற்றுள்ளவர் தான் தமிழக முதல்வர்.

public meeting

அதை சகித்துக் கொள்ள முடியாமல் பாஜகவின் விசுவாசியாக உள்ள தமிழக ஆளுநர், தனியாக ஒரு ஆட்சியை தமிழகத்தில் நடத்த நினைக்கிறார். அது ஒருபோதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண். அவர்கள் நடமாடிய மண். பாஜக ஆளுநரின் அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது.

திராவிட மாடலை கேலி செய்யும் பாஜகவினர், 2021 தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த அதே வாக்குறுதிகளை அப்படியே சொல்லி தான் தற்போது கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலில் ஓட்டு கேட்கின்றனர். இது தான் திராவிட மாடல் அரசின் வெற்றி.

நாட்டு மக்களின் முன்னேற்றம் தான் லட்சியம், முக்கியம் என்று இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் ஒரே முதல்வர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும்தான். இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை தருவது தமிழ்நாடு மட்டும்தான். நம்பர் ஒன் முதல்வர் தமிழக முதல்வர் தான் என்று அனைத்து பத்திரிகைகளும் எழுதுகின்றன.

public meeting

பொதுமக்களுக்கு பக்கபலமாக திமுகவினர் நாங்கள் உள்ளோம். உங்களின் எந்த தேவைகளானாலும் நேரில் கூட வர வேண்டாம். தொலைபேசியில் அழைத்தால் போதும். நிறைவேற்றித் தருவோம். எனவே தமிழக மக்கள் வளம்பெற நல்லாட்சி புரியும் தமிழக முதல்வருக்கு என்றும் தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறி வேண்டுகோள் விடுத்தார்.