சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கிற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரை ஆற்றினார்.
அப்போது, ’’மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரால் வழிநடத்தப்படுகிற மத்திய அரசின் தொடர் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் கிடைத்திராவிட்டால் இந்த செஸ் ஒலிம்பியாட் இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற சாத்தியமில்லை. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். ஒரு குடும்பமாக நாம் எல்லாரும் இங்கு ஒருங்கிணைந்துள்ளோம். 2000 பங்கேற்பாளர்களையும், ஆயிரக்கணக்கான ரசிகர்களையும் வரவேற்கிறேன்’’ என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோரையும் வரவேற்று உரையாற்றினார்.