அமைச்சர் எ.வ.வேலு pt desk
தமிழ்நாடு

"காசாகிராண்ட் யார் என்று கூட எனக்குத் தெரியாது.." - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

வருமான வரித்துறையினர், தன் ஓட்டுநரை அச்சுறுத்தி கேள்விகளை எழுப்பியதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார். காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

webteam

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இது குறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “பாஜகவை சேர்ந்தவர்களிடம் ஏன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை? பாஜக திட்டமிட்டு வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது.

எவ வேலு

எனக்கு தொடர்புடைய இடங்களில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை. எனக்கு எதிராக ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் திமுகவினரை அச்சுறுத்த பாஜக வருமான வரித்துறையை அம்பு போன்று பயன்படுத்துகின்றனர். எங்கள் இலக்கு 40க்கு 40-இல் வெற்றி பெறுவதுதான்” என்று தெரிவித்தார்.