தமிழ்நாடு

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை !

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை !

jagadeesh

தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். மேலும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடைய குடும்பத்தினர் 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பாகவே கொரோனா அறிகுறி தெரிந்ததாகவும் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதால் தற்போது அறிகுறி குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா பாதிப்பு என தகவல்கள் பரவியது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லையென அப்போலோ மருத்துவமனை உறுதியளித்து இருக்கிறது.