தமிழ்நாடு

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

Rasus

கழிவுகளை கொட்டிய புகாரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் மாசு ஏற்படுத்தும் வகையில் 3.5 லட்சன் டன் ஸ்டெர்லைட் கழிவுகளை உப்பாறு மற்றும் தனியார் பட்டா நிலங்களில் கொட்டியதாக நெல்லையை சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்க வந்தபோது, இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனம் டிசம்பர் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தூத்துக்குடி ஆட்சியரும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.