சேலம் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவையும் எட்ட வாய்ப்புள்ளதாகவும், நீர் இருப்பை தொடர்ந்து கண்காணித்து வெளியேற்றவும் ஜல் சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மழைப்பொழிவு சற்றே குறைந்துள்ள நிலையில் கபினி, ஹராங்கி, ஹேமாவதி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் சராசரியாக 10 முதல் 30 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தாலும் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், அணையின் நீர் இருப்பைக் கண்காணித்து நீரை வெளியேற்ற வேண்டும் என ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 30ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.