தமிழ்நாடு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம்

Sinekadhara

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் கடந்துபோனதன் விளைவாக, தமிழகத்தில் வறண்ட காற்று வீசிவருகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவந்த தொடர்மழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வருகிற மே 31ஆம் தேதிமுதல் கேரளாவில் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.