தமிழ்நாடு

துளிர்க்கும் நம்பிக்கை: சாலையில் இருந்து மீட்கப்பட்ட ஆதரவற்றோருக்காக மெல்லிசை கச்சேரி

துளிர்க்கும் நம்பிக்கை: சாலையில் இருந்து மீட்கப்பட்ட ஆதரவற்றோருக்காக மெல்லிசை கச்சேரி

webteam

நெல்லையில் சாலைகளில் இருந்து மீட்கப்பட்ட ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மெல்லிசை கச்சேரி சமூக விலகலுடன் நடைபெற்றது.

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த 2 வாரமாக ஊரடங்கு அமலில் உள்ளது. வீட்டை விட்டு பல்வேறு காரணங்களால் வெளியேற்ற பட்டவர்கள்,வெளியேறியவர்கள், ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் என சாலையில் ஆங்காங்கே தங்கியிருந்தவர்களை, மாநகராட்சி உதவியுடன் சோயா என்ற தொண்டு நிறுவனத்தினர் அரசு பள்ளி வளாகத்தில் தங்க வைத்து உணவு அளித்து வருகின்றனர்.

இந்த முகாமில் பெரும்பாலும் முதியோர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ளனர். பெருந்தொற்று காலத்தில் மனரீதியாக கூடுதல் பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது சிறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை தன்னார்வலர்கள் நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்ச்சியாக நெல்லையில் உள்ள மேடை மெல்லிசை கலைஞர்களை கொண்டு ஒரு இசைக் கச்சேரி நடத்தினர்.

இதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் மேடை மெல்லிசை கலைஞர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அதனை காண்பதற்காக வகுப்பறை நாற்காலிகள் மைதானத்தில் வரிசைப்படுத்தப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் முதியவர்கள் அனைவரும் நாற்காலிகளில் ஒருவருக்கொருவர் தனிமனித இடைவெளியை கடைபிடித்து இசைக்கச்சேரியை பார்த்து ரசித்தனர். நோய்க்கு தீர்வு மருந்து மட்டுமல்ல , நல்ல மனங்களின் ஒத்துழைப்பும் சேவையும் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது

- நாகராஜன்