மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு இன்று தொடங்கவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 10 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
வீடு தேடி வாகனம் மூலம் மருத்துவ சேவை அளிக்க இந்த திட்டம் வகை செய்கிறது. வாகனத்தில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்டோர் மக்களைத் தேடிச் சென்று பொது மருத்துவம் அளிக்க இருக்கின்றனர்.