தமிழ்நாடு

சென்னையில் ஆட்டுக்கறி கிலோ ரூ. 1000க்கு விற்பனை !

சென்னையில் ஆட்டுக்கறி கிலோ ரூ. 1000க்கு விற்பனை !

jagadeesh

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் ஆட்டுக்கறியின் விலை ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மீன் வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக்கடைகள், இன்று முதல் பிற்பகல் ஒரு மணி வரையே திறந்திருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பொது‌மக்கள் இறைச்சி வாங்குவதற்காக கடையில் திரண்டனர். பெரும்பாலும் முகக்கவசம் அணிந்திருந்த மக்கள், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தனர். சென்னையில் ஆட்டுக்கறி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிக்கன் விலை ஒரு கிலோ 220 ரூபாயாக இருந்தது. மீன் விலையைப் பொருத்தவரை, ஒவ்வொரு வகை மீன்களின் விலையும் 300 ரூபாய் வரை அதிகரித்திருந்தது.

சைதாப்பேட்டையில்‌ தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வசதியாக, அரசுக்கல்லூரி மைதானம் ஒன்று மீன் சந்தையாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த 50 கடைகளில் மக்கள் மீன் வாங்கிச் சென்றனர். மக்கள் முகக்கவசங்கள் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தினர்.