மதுரையில் மருதுபாண்டியர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மருது பாண்டியர்கள் எனப்படும் மருது சகோதரர்கள், ஆங்கிலேயருக்கு எதிராக தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டங்களிலும், புரட்சிகளிலும் ஈடுபட்டவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் வீரப் போராட்டம் நடத்தியவர்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள், ஆங்கிலேயருக்கு எதிராகப் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களின் 216வது நினைவு தினமான இன்று, மதுரை மணி நகரம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மருது சகோதரர்களின் நினைவுதினத்தையொட்டி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.