தமிழ்நாடு

மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை விழா தொடங்கியது

மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை விழா தொடங்கியது

webteam

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு கன்னியா குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருவது வழக்கம். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பெண்கள் தலையில் இருமுடி கட்டுடன் வந்து பொங்கலிட்டு அம்மனைத் தரிசித்து செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் வருடா வருடம் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்த வருட மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந் த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா பத்தாவது நாளான மார்ச் 12 ஆம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது