தமிழ்நாடு

சிவாலயங்களில் விடியவிடிய சிவராத்திரி விழா: பக்தர்கள் தரிசனம்

சிவாலயங்களில் விடியவிடிய சிவராத்திரி விழா: பக்தர்கள் தரிசனம்

Rasus

மகா சிவராத்திரியையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து சிவன்கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இரவு முழுவதும் சிவராத்திரையையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றன. அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் பெற்றனர். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித்‌தலம் என அழைக்கப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாய என கோஷம் எழுப்பினர்.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் நான்கு யாக பூஜைகள் நடைபெற்றன. மார்த்தாண்டம் அருகேயுள்ள திருநட்டாலத்தில் உள்ள கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் சிவனை தரிசனம் செய்தனர். இதேபோல், நெல்லையப்பர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோயிலில் வழிபாடு நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை என தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.