மன்னார் வளைகுடா பகுதியில் பாலீகிட்ஸ் என்ற அரிய வகையைச் சேர்ந்த புழுக்கள், இறால் பண்ணை மாஃபியாக்களால் கொள்ளையடிக்கப்படுகிறது.
உலகில் சுமார் 600க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும்பகுதி மன்னார் வளைகுடா. இங்கு பாம்பன் கடலோரப் பகுதியின் சதுப்பு நிலங்களில் மட்டுமே காணப்படும் பாலீகிட்ஸ் என்ற வகையைச் சேர்ந்த புழுக்கள், கடலில் வளத்தை பாதுகாக்கவும் பருவ காலங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்து செல்லும் பறவைகளுக்கு உணவாகவும் பயன்படுகின்றன.
இந்த புழுக்கள் பாம்பன் தெற்குவாடி, சின்னப்பாலம், முந்தல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இறால் பண்ணை மாபியாக்களால் கொள்ளையடிக்கப்படுவது புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. கள ஆய்வின்போது கடல் பகுதியில் கூலித்தொழிலாளர்கள் பாலிகீட்ஸ் சேகரித்துக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் 20 பேரை கைது செய்தனர். 600 கிலோ புழுக்களையும் பறிமுதல் செய்தனர்.