தமிழ்நாடு

மதுரை: விமானம், ரயில் போன்று வகுப்பறைகளை வடிவமைத்துள்ள அரசுப்பள்ளி தலைமையாசிரியர்

மதுரை: விமானம், ரயில் போன்று வகுப்பறைகளை வடிவமைத்துள்ள அரசுப்பள்ளி தலைமையாசிரியர்

kaleelrahman

கொரோனா ஊரடங்கால் மன அழுத்திற்கு ஆளாகியுள்ள மாணவர்களை புத்துணர்வுடன் வரவேற்க விமானம், ரயில் போன்ற வடிவமைப்பில் வகுப்பறைகளை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளான பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை தொடங்கவில்லை. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு செல்லாமல் மன அழுத்தத்தோடு வீட்டில் இருக்கின்றனர்.

இதையடுத்து, மாணவர்களை புத்துணர்வுடன் வரவேற்கும் வகையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சணகார தெரு பகுதியில் அமைந்துள்ள சிங்காரதோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் விமானம் மற்றும் ரயில் போன்ற அமைப்புகளில் வகுப்புறைகளை உருவாக்கி மாணவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன்.

இந்த பள்ளியில் பயில கூடிய மாணவர்களுக்கு விமானத்தை பார்க்க வேண்டும் அதில் பயணிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்துள்ளது. அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் தலைமை ஆசிரியரின் முயற்சியால் அந்த பகுதியில் உள்ள லயன்ஸ் கிளப் அமைப்பினரின் உதவியுடன் பள்ளி வகுப்பறை முழுவதையும் ஆகாயத்தை போல உருவாக்கி அதில் விமானம் பறப்பது போன்றும் வகுப்புறை ஜன்னல்கள் விமான ஜன்னல்கள் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பறைக்கு மாணாக்கர்கள் ஒவ்வொரு முறை வரும்போது விமானத்திற்குள் செல்வது போன்ற உணர்வை தரும் வகையில் தத்ரூபமாக விமான வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. அதில், நீல நிறத்தில் உள்ள ஆகாய கதவுகளை திறந்தால் வகுப்பறைக்குள் செல்வது போன்றும் வகுப்பறையை உருவாக்கியுள்ளனர்.