தமிழ்நாடு

திடீரென ஏற்பட்ட வலிப்பு - கூழ் காய்ச்சும் அண்டாவில் விழுந்த இளைஞர் பலி

திடீரென ஏற்பட்ட வலிப்பு - கூழ் காய்ச்சும் அண்டாவில் விழுந்த இளைஞர் பலி

webteam

மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் பணியில் இருந்தவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக சூடான அண்டாவில் விழுந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 29 ஆம் தேதி ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்போது கூல் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியைச் சேர்த்த முத்துக்குமார் (எ) முருகன் என்பவருக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர், நிலைதடுமாறி கொதித்துக் கொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்துள்ளார்.

அப்போது அண்டாவில் இருந்த கூல் அவர் மீது கொட்டியுள்ளது. இதில், துடிதுடித்த அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் முருகனுக்கு 65 சதவீத தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், கூல் காய்ச்சும் பாத்திரத்தில் வலிப்பு ஏற்பட்டு நிலைதடுமாறி முருகன்; விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.