தமிழ்நாடு

மதுரை சடச்சி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்களின் வீடுகளுக்கே சென்ற 1500 கிலோ பிரியாணி

மதுரை சடச்சி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்களின் வீடுகளுக்கே சென்ற 1500 கிலோ பிரியாணி

webteam

மதுரை மாவட்ட திருமங்கலம் அருகே நடைபெற்ற சடச்சியம்மன் கோயிலில் 1500 கிலோ பிரியாணி தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 

மதுரை மாவட்டம்  அம்மாபட்டி கிராமத்தில் உள்ள சடச்சி அம்மன் கோயில் பிரபலமானது. இந்த கோயிலுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். எப்போதும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவானது இம்முறை ஊரடங்கு காரணமாக ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டது.

20 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள பொங்கல் வைத்து கொண்டாடி மகிழும் இவ்விழாவில் இம்முறை கூட்டத்தைத் தவிர்க்கும் வண்ணம் கோயில் சார்பாக மட்டும் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகள் அம்மனுக்கு பலியிடப்பட்டன. கோயில் வழிமுறைப்படி பலியிடப்பட்டவைகளின் ரத்தம் கோயில் உள்ளே உள்ள ஆறு அடி உறைக்கிணற்றில் வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 1500 கிலோ பிரியாணி தயார் செய்யப்பட்டு, அவை வாளியில் அடைக்கப்பட்டு பக்தர்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லப்பட்டு  பிரசாதமாக வழங்கப்பட்டது.