தமிழ்நாடு

ஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ!

ஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ!

webteam

ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற திருவிழாவாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அதிகாலை 6 மணியளவில் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகைகறை ஆற்றில் இறங்கினார். இந்த நிகழ்வை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர். 

சுமார் 10 லட்சம் பக்தர்களின் பங்கேற்ற இந்த விழாவால் மதுரை திருவிழாக்கோலம் பூண்டது. திருவிழாவின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறைய வலம் வரும் நிலையில் ஆம்புலன்ஸ் வந்ததால் முன்னோக்கி சென்ற கள்ளழகர் மீண்டும் பின்னோக்கி சென்று வழிவிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே கள்ளழகர் வலம் வர, அந்நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றும் வருகிறது. உடனடியாக முன்னோக்கிச் சென்ற கள்ளழகர் மீண்டும் பின்னோக்கி கொண்டு வரப்பட்டு வழி விடப்படுகிறது. அங்கிருந்த காவலர்களும் உதவி செய்ய பக்தர்களும் ஓரமாக நகர்ந்து வழிவிட்டு ஆம்புலன்சை கடந்து போகச் செய்கின்றனர்.

'ஆம்புலன்ஸ் வந்தால் கடவுள் கூட வழிவிடுகிறார். மக்களாகிய நாமும் இதையே கடைபிடிக்க வேண்டும்’ என்று பதிவிட்டு பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.