தமிழ்நாடு

20 ஆண்டுகால அரியர் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி

20 ஆண்டுகால அரியர் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி

webteam

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போர், அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்றுக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு பல்கலைக்கழகம் ஒரு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து துணைவேந்தர் துரைசாமி, “டிசம்பர் 2019, மே 2020 ஆகிய பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுக் கொள்ள கடைசி வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்புத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உடனடியாக பட்டம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். 

இதற்கான அனுமதியை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு அனுமதித்திருக்கும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், பட்டப்படிப்பில் இருந்து விடுபட நினைக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி பெற்ற பாடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் சான்றிதழோ, பட்டயச் சான்றிதழோ வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதுநிலைப் படிப்பில் இடைநிற்கும் மாணவர்களுக்கு முதுநிலை பட்டய சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.