தமிழ்நாடு

பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்

பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்

rajakannan

தமிழக அரசுப் பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மன்னுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  பொதுமக்களின் இன்னலைக் கருத்தில் கொண்டு விரைவில் விசாரிக்க மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவசர வழக்காக ஏற்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். 

இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது, கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். 
மேலும், ‘ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்கிறது. இது அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும். அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. கட்டண உயர்வு விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுருத்தியுள்ளது. ’ என்று நீதிபதி கூறினார்.

‘அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு குறித்த அட்டவணையை ஒட்ட வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.  இதனையடுத்து மனுக்களானது விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், நீதிமன்றம் பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.