தமிழ்நாடு

எளிய முறையில் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் தகவல்

எளிய முறையில் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் தகவல்

Veeramani

கொளத்தூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற அவர் சான்றிதழை அங்கு வைத்து மரியாதை செலுத்தினார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அடுத்து ஆட்சி அமைக்க உள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து கொளத்தூர் சென்ற அவர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் ஸ்டாலினை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.

வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்ட ஸ்டாலின், அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு நினைவிடத்தில் வெற்றிச் சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுகவின் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயல்படுவோம் என கூறினார். மேலும், கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.