முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

“எங்களை சீண்டாதீங்க, தாங்கமாட்டீங்க! இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!”- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

“அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரவாதியைப்போல் நடத்தப்படுகிறார் மக்கள் பிரதிநிதி செந்தில் பாலாஜியை ஏதோ தீவிரவாதியைப் போல அமலாக்கத்துறை நடத்தியுள்ளது”- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

PT

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு, முதல்வர் ஸ்டாலின் காட்டமாக இன்று பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வழியாக பேசியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அதிமுக மீதும் பாஜக மீதும் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

MK Stalin

முதல்வர் பேசியவற்றின் மிக முக்கிய விவரங்கள் இங்கே:

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான இந்த நடவடிக்கை, அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். செந்தில் பாலாஜி மீது தவறு இருந்தால் அவரை அழைத்து விசாரித்தால் தவறில்லை.

மக்கள் பிரதிநிதி செந்தில் பாலாஜியை ஏதோ தீவிரவாதியைப் போல அமலாக்கத்துறை நடத்தியுள்ளது. ஒரே ஸ்கிரிப்படை வேறு வேறு மாநிலங்களில் மத்திய அரசு டப்பிங் செய்கிறது. திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அதிமுக-வை கொத்தடிமை கூடாரமாக்க, அமலாக்கத்துறை, சிபிஐ-ஐ பயன்படுத்தியது பாஜக. அதிமுக மாதிரி அடிமைகளை, விசாரணை அமைப்புகளை காட்டி மிரட்டி பணியவைக்கிறார்கள். அதிமுகவைப் போல் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் அல்ல திமுககாரர்கள். மிரட்டிப்பணிய வைக்க நினைத்தால் குனியமாட்டோம்; நிமிர்ந்து நிற்போம். நேருக்குநேர் சந்திப்போம். இந்தி எதிர்ப்பு போராட்டம், மிசா காலம் என நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை. மத்திய பாஜக அரசு எதேச்சதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சியில் ரெய்டு நடத்தினார்களே... குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களா? பாஜக-வின் காலடியில் கிடக்கும் பாதம் தாங்கி பழனிசாமி செந்தில் பாலாஜி பற்றி குறைகூறுகிறார்.

நாங்க அடிச்சா தாங்கமாட்டீங்க. எங்களை சீண்டாதீங்க, தாங்கமாட்டீங்க! இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை! ” என்றுள்ளார்.

முதல்வர் பேசிய வீடியோவை, இங்கே காண்க: