சாலையை கவனிக்காமல் கடப்பதற்கு முயன்ற நாகையை சேர்ந்த ஒருவர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிசேககட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர் இன்று காலையில் சாலை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற அவர், தனக்கு பின்புறம் வந்த லாரியை கவனிக்காமல் சட்டென ஓடினார். இதனால் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த சரக்கு லாரியின் சக்கரத்தில் சிக்கிய அவர், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சற்று நேரம் நின்று சாலையின் இருபுறம் பார்த்துவிட்டு கடக்காமல் சென்றதால் அவர் உயிர் நொடிப்பொழுதில் பிரிந்துவிட்டது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து பொறையார் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்று எத்தனையோ பேர் சாலையை அலட்சியமாக கடப்பதால் நாள்தோறும் பல விபத்துக்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றனர். அதன்மூலம் பல உயிர்களும் பிரிந்துகொண்டிருக்கின்றன. கொடிய நோய் என்றாலும் சில காலம் மருத்துவ சிகிச்சைப் பின்னர், பல கட்டங்களை தாண்டி தான் உயிர் பிரியும். ஆனால் ஆரோக்யமாக இருக்கும் ஒருவரும் சாலை விபத்தால் நொடிப்பொழுதில் மரணமடையலாம் என்பதால், அனைவரும் கவனத்துடன் சாலையில் செல்ல வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.