தமிழக உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிடப் போவதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், புதிதாக உருவாக்கப்பட்ட 9மாவட்டங்களில் தொகுதி மறுவரையறைக்குபின் தேர்தலை நடத்தவும் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவில் சந்தேகம் கேட்டு திமுக கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மீண்டும் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது.